வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகளில் 3 ஆயிரத்து 604 பேர் ஈடுபடுவார்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்


வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகளில் 3 ஆயிரத்து 604 பேர் ஈடுபடுவார்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் 3 ஆயிரத்து 604 பேர் ஈடுபடுவார்கள் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முதல் நிலை பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, பயிற்சியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறிந்து அவற்றில் ஒவ்வொரு தாழ்வான பகுதிக்கும் 10 ஆண்கள், 5 பெண்கள், 2 கால்நடை முதல் நிலை பொறுப்பாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 604 முதல் நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்பாளர்கள் மழை காலங்களில் பொதுமக்களுக்கு வெள்ளம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த முதல் நிலை பொறுப்பாளர்கள் பருவமழை காலங்களில் பொதுமக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் உமா மகேஷ்வரி, உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), பத்மாவதி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story