திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 10:15 PM GMT (Updated: 28 Oct 2018 7:59 PM GMT)

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் நரசிம்மன் பிரகாசம், உதயகுமார், ருக்மாங்கதன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் ,பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைமை நிலைய செயலாளர் தியாகு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் சவுத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கதிரவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை சரி செய்யவேண்டு என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் கீதா நன்றி கூறினார்.

Next Story