புதுச்சேரியிலும் ஐகோர்ட்டு கிளையை அமைக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரியிலும் ஐகோர்ட்டு கிளையை அமைக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2018 5:30 AM IST (Updated: 29 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு கிளையை புதுச்சேரியிலும் அமைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 3–வது மாடியில் ரூ.12 கோடி செலவில் 9 புதிய கோர்ட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். புதுவை தலைமை நீதிபதி தனபால் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்தை பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னல் நேற்று இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கூறினார். பிரெஞ்சு கலாசரத்தின் அடிப்படையில் இங்கு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்த கலாசார கட்டிடங்களையும் பாதுகாத்து வருகிறோம்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இளம் வக்கீல்களுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகிறோம்.

வக்கீல்கள் சேமநல நிதிக்கு கடந்த காலங்களில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் ரூ.40 லட்சமாக உயர்த்தினோம். அந்த தொகையை வருங்காலங்களில் மேலும் உயர்த்தி வழங்குவோம்.

சென்னை ஐகோர்ட்டில் புதுவை வக்கீல்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். எனவே நீதிபதி பணியிடங்களில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும்.

மிசோரம், நாகலாந்து, மணிப்பூர் போன்றவற்றில் எல்லாம் ஐகோர்ட்டு உள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் சென்னை ஐகோர்ட்டின் கிளையை அமைக்கவேண்டும். இதுதொடர்பாக நான் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்துடன் பேசியுள்ளேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், கோவிந்தராஜ், நிஷா பானு, சரவணன், அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, அரசு பிளீடர் காந்திராஜ், புதுவை வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் முதன்மை குற்றவியல் நீதிபதி கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.


Next Story