வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30-9-2018 அன்று 5 ஆண்டுகள் முடிவடைந்திருந்தால் வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை கல்விக்கு ரூ.400, பட்டப்படிப்பிற்கு ரூ.600 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடி வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பதிவு செய்த நாளிலிருந்து 30-9-2018 அன்று 1 ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். இவர்களுக்கு மாத உதவித்தொகையாக 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, மேல்நிலை கல்விக்கு ரூ.750, பட்டப்படிப்பிற்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது. மேற்காணும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் இது குறித்த தகவல்களுக்கு tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story