தூய்மை பணியாளர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்


தூய்மை பணியாளர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:54 AM IST (Updated: 29 Oct 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹையர்மானி கூறினார்.

கிருஷ்ணகிரி,

தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹையர்மானி கிருஷ்ணகிரி வந்தார். அவர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரபாகர் வரவேற்றார். கூட்டத்தில் தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹையர்மானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி, புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு கிடைக்க செய்து வருகிற 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கமாக செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நலன் கருதி அவர்களுக்கு வழங்கக் கூடிய உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள், கடனுதவிகள் மற்றும் காப்பீடு குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் மத்திய மாநில அரசினுடைய திட்டங்கள் தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்கும் வகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் திட்டங்களை பற்றி நன்கு தெரிந்துகொண்டு அத்திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தூய்மை பணியாளர்கள் சொந்தமாக குடியிருப்பு, குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளர்கள். கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சியில் பணியாளர்களுக்கு குடியிருப்பு தேவைபடும் பட்சத்தில் கருத்துரு வழங்கினால் அதன் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக வீடு கட்டி தரப்படும்.

நல வாரிய உறுப்பினர்கள் மத்திய, மாநில அரசின் திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்க கூடிய வகையில் பணிபுரிய வேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் கழிவுநீர் தொட்டி தூய்மை செய்யும் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ..12 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி,் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் சிவசங்கரன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story