திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் நேர்மை உறுதிமொழி ஏற்பு


திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் நேர்மை உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ‘நேர்மை உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

‘ஊழலை ஒழிப்போம்-புதிய இந்தியாவை அமைப்போம்’ என்ற கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முதல் நவம்பர் 3-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ‘நேர்மை உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் உள்பட ஏராளமான போலீசாரும், காஞ்சீபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் நேர்மை உறுதிமொழி ஏற்றனர்.

கல்பாக்கம் அடுத்த பவுஞ்சூர் கிராமத்தில் உள்ள லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய்கிருஷ்ணன், பாபு மற்றும் துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் உள்பட அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Next Story