காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு ரூ.4½ கோடியில் புதிய கட்டிடம்


காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு ரூ.4½ கோடியில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பயிற்சி பள்ளி, பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

காஞ்சீபுரம்,

மழை காலத்தில் ஒழுகுவது, போதிய வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டித்தரும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ரூ.4½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதற்காக அதே மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்தநிலையில் நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் மணிமேகலை, அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வள்ளியம்மாள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Next Story