துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன்-ரூ.1 லட்சம் கொள்ளை: காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் யார்? கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை


துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன்-ரூ.1 லட்சம் கொள்ளை: காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் யார்? கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 30 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

தாய், மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 150 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் யார்? என்பது பற்றி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி காந்தி தெருவை சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி. இவருடைய மனைவி சம்சாத்பேகம் (வயது45). தமிமுன்அன்சாரி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சம்சாத்பேகம், தனது மகள் தமிமுன்யாஸ்மினுடன் காந்தி தெருவில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் சம்சாத்பேகம், அவருடைய மகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டின் பீரோவில் இருந்த 150 பவுன், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் பொதக்குடி, அத்திக்கடை, கொரடாச்சேரி, லெட்சுமாங்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகளின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய தொடங்கி உள்ளனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Next Story