சோழவந்தான் வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது; லாரிகள் பறிமுதல்


சோழவந்தான் வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது; லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Oct 2018 4:14 AM IST (Updated: 30 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் பகுதி வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சோழவந்தான்,

சோழவந்தான் பகுதி வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமார் ஆலோசனையின் பேரில் சோழவந்தான், காடுபட்டி, நாகமலைபுதுக்கோட்டை, சமயநல்லூர் ஆகிய போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்த 2 லாரிகளை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் அள்ளிய 7 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்ததில் 4 பேர் சிக்கினர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் அள்ளிய கார்த்திக்ராஜா(வயது 26), சசிக்குமார்(31), ரவிபாண்டி(40), கிஷோர்(19) ஆகியோர் கைதுசெய்தனர். ளள

சோழவந்தான், திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, தென்கரை, முள்ளிபள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, சித்தாதிபுரம,பேட்டை, கொடிமங்கலம் உள்ளிட்ட வைகை ஆற்று பகுதியில் உள்ள கிராங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், மினி வேன், லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story