இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இல்லை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
‘இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் தேவபார்த்தசாரதி வரவேற்றார். விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நலவாழ்வு மையத்தினை திறந்துவைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மனித வாழ்க்கையில் முக்கிய அம்சம் உடல் ஆரோக்கியம். எத்தனை செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அத்தனை செல்வமும் பயனற்று விடும். உடல் ஆரோக்கியமே முக்கியம். கஷ்டப்படும் ஏழை மக்களின் பணம் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதை தடுக்க பிரதமரால் ஆயுஸ்மன் பாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மருத்துவ சிகிச்சைக்கு கொடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம். இத்திட்டம் உலகில் எங்குமே கிடையாது. நம்நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட உன்னத திட்டம் ஆகும். இந்தியாவில் 1½ லட்சம் நலவாழ்வு மையம் திறக்கப்பட்டு வருகிறது. அதில் மேல்பட்டியில் திறக்கப்பட்ட மையமும் அடங்கும்.
அகில இந்திய அளவில் பிரசவத்தில் தாய்-சேய் மரணம் தமிழகத்தில் தான் மிகவும் குறைவு ஆகும். இது முழுமையாக குறைக்க வேண்டும். பிரசவத்திற்கு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் தான் தாய் சேய் நலமாக வீடு திரும்புவார்கள் என்ற நிலையை அடைய வேண்டும். எனவே இந்த சேவை மையத்தை வீட்டின் ஒரு அங்கமாக நினைக்க வேண்டும்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 38 ஆயிரத்து 62 பேருக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்து அதில் 34 ஆயிரத்து 30 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 33 சதவீத வீடுகளில் கழிவறை வசதி இல்லாமல் இருந்தது. இந்த 4 ஆண்டில் மட்டும் 9 கோடி தனிநபர் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு உங்களுக்கு உழைக்கும் பிரதமரை உங்கள் வீட்டில் ஒருவராக நினைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பெற்றுள்ள தாய்மார்களின் குழந்தையை கையில் எடுத்து அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.500 வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, அவர்களுக்கு பல்வேறு வகையான உணவு வழங்கி பரிமாறினார்.
நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட பொது செயலாளர் வாசுதேவன், ஒன்றிய ஆணையாளர்கள் கலைச்செல்வி, பாரி, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் குமார் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடைபெறும் சம்பவம், அது அந்த நாட்டின் பிரச்சினை. அதில் இந்தியாவின் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெயில், புயல், மழை எல்லாவற்றுக்கும் மோடிதான் காரணம் என்று சொல்வார்கள். இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. அது தற்போது வெடித்து உள்ளது’ என்றார்.

Related Tags :
Next Story