நெல்லையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, துணைதலைவர் கணபதிசுந்தரம், முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், வக்கீல் ஜெனி, பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், சங்கரன்கோவில் நகரசபை முன்னாள் துணைதலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், பேரவை இணை செயலாளர் பரமசிவஅய்யப்பன், துணை செயலாளர் எம்.சி.ராஜன், மாவட்ட பொருளாளர் பால்கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, திவ்யா யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. –காங்கிரஸ்தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மேயர் உமாமகேசுவரி, நெசவாளர் அணி அமைப்பாளர் அந்தோணி, விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லையில் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடிஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, மாவட்ட பொருளாளர் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா –த.மா.கா.பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தொழில் நுட்பபிரிவு மாநில செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி மாநில செயலாளர் வேல்ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் முத்துபலவேசம், ஜெயசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ம.தி.மு.க.– தே.மு.தி.க.ம.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் முகமதுஅலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சீயோன்தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில துணைதலைவர் பிச்சையாதேவர், துணைபொதுச்செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த், மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திரவெற்றி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் பவுல்ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணியினர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பாலு தலைமையில் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணிதாஸ் தலைமையிலும், வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தினர் பந்தல்ராஜா தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரசார் நெல்லையில் தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் சமரசம் செய்து வைத்தார்.
சங்கர்நகர் பண்டாரகுளம்நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் பண்டாரகுளத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர் ராஜவடிவு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் வெங்கண்ணா, மாரியப்பன், வக்கீல்ராஜா, குமார், சுடலைமுத்து, சுப்புகுட்டி, வேணிராஜா, முப்பிடாதி, ராமையா, பட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.