நெல்லையில் 2–வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது


நெல்லையில் 2–வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 3:15 AM IST (Updated: 30 Oct 2018 7:50 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2–வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் 2–வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்கள் 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். நேற்று முன்தினம் அவர்கள் நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2–வது நாளாக... 

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக சத்துணவு ஊழியர்கள் நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை கோரிக்கைகளை விளக்கி பேசினார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் கங்காதரன், பொருளாளர் வீரராஜ், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைசிங் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் பஸ் நிலையம் எதிரில் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. இதனால் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

250 பேர் கைது 

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, போலீஸ் பஸ், வேன்களில் ஏற்றிச்சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story