டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: வாலாஜாபாத் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு


டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்:  வாலாஜாபாத் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Oct 2018 4:00 AM IST (Updated: 30 Oct 2018 10:46 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி காணப்படும் தொழிற்சாலைகள், குடோன்களுக்கு, பொது இடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார். அதன்படி வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தி நிலை மற்றும் ஒழிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அங்கு கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் டெங்கு கொசு உற்பத்தி நிலை உள்ளதை கண்டறிந்தார்.

இதையடுத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த மாவட்ட கலெக்டர் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் பேரூராட்சியில் உள்ள அனைத்து இடங்களில் அதிகமாக கவனம் செலுத்தி கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ்க்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சாந்தகுமார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Next Story