கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் மறியல் 650 பேர் கைதாகி விடுதலை
புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 650 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
புதுக்கோட்டை,
சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டபூர்வ மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையினை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி முதல் 4 நாட்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததால் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் மதுரை சாலையில் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல நேற்றும் 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் தங்களது பணியை புறக்கணித்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 560 பெண்கள் உள்பட சத்துணவு ஊழியர்கள் 650 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் புதுக்கோட்டை-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story