தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் தேவராஜன், பொருளாளர் மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கூட்டுறவுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஆணைகளை காலதாமதமின்றி உடனடியாக வெளியிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story