ஆம்பூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
ஆம்பூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி வினோதினி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது வினோதினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வினோதினிக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் சரியாகாததால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் வினோதினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வினோதினி பன்றி காய்ச்சலால் இறந்ததாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து வீராங்குப்பம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
ஆம்பூர் அருகே உள்ள ராள்ளகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி (45), கூலி தொழிலாளி. இவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். காய்ச்சலுக்காக ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இதே போல ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தை சேர்ந்த ருக்குமணியம்மாளும் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். (இது குறித்த விரிவான செய்தி 22-ம் பக்கம்)
ஆம்பூரை சுற்றியுள்ள கிராம பகுதியில் ஒரு நாளில் 3 பேர் மர்மகாய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story