ராகுல் காந்தி தலைமையில், மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : தேவேகவுடா அழைப்பு
ராகுல் காந்தி தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தேவேகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு,
சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
பல்லாரி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன. இதையொட்டி இடைத்தேர்தல் களத்தில் 31 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லாரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் தேவேகவுடா மற்றும் சித்தராமையா ஒரே மேடையில் தோன்றி வாக்கு சேகரித்தனர். இந்த நிலையில் தேவேகவுடா நேற்று பல்லாரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளின் சக்தி என்ன என்பது தெரியவரும். லண்டன் செல்ல வேண்டி இருந்ததால், வால்மீகி விருது விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை பா.ஜனதாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். மத்தியில் ஆட்சியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவது தான் எங்களின் குறிக்கோள் ஆகும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி நான் குறைவாக பேச மாட்டேன்.
பிரதமர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியின் முடிவே இறுதியானது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், அதை நான் ஆதரிப்பேன். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம், தேசிய அளவில் ஒரு செய்தியை நாங்கள் கொடுக்கிறோம். அகில இந்திய அளவில் 2 நிலையில் கூட்டணி அமையும்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள். பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கொள்கை கொண்ட அனைத்து கட்சிகளும் ராகுல் காந்தி தலைமையில் ஓரணியில் திரள வேண்டும். ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய நான் தயாராக உள்ளேன்.
பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதியில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். வட கர்நாடகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. இதற்கு முன்பு ஏராளமான பணிகளை செய்துள்ளோம்.
கர்நாடகத்தில் பா.ஜனதாவை தோற்கடித்து தென்இந்தியாவில் அக்கட்சியின் நுழைவு வாயிலை மூடுவோம். இந்த இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story