குமரி மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: பன்றிக்காய்ச்சலுக்கு வக்கீல் பலி
நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு வக்கீல் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதில் பலருக்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள பன்றிக்காய்ச்சல் வார்டுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு திரேஷா பிரைட் (வயது 60) என்ற பெண்ணும், சுகன்யா என்ற கர்ப்பிணியும் பலியாயினர். சுகன்யாவை காப்பாற்றும் முயற்சியில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்த போது அந்த குழந்தையும் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தெங்கம்புதூரைச் சேர்ந்த வக்கீல் ரவிச்சந்திரன் (52) என்பவர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியோடு கடந்த 24-ந் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது. உடனே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் ரவிச்சந்திரன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரி டீன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “ரவிச்சந்திரன் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஒரு கால் மற்றும் கை செயல்படாத நிலையில் இருந்தது. அதோடு பன்றிக்காய்ச்சல் அறிகுறியும் இருந்ததால் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார்“ என்றார்.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பன்றிக்காய்ச்சல் வார்டில் தற்போது 11 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி வாவத்துறையை சேர்ந்த ரமேஷ் (45) என்ற மீனவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர், கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரமேஷ் பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தற்போது காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். எனவே பொதுமக்களிடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் அதனை ஒழிப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் செயல்பட வேண்டும். ஆனால் நாகர்கோவில் நகரில் பெரும்பாலான இடங்களில் கொசுக்கள் தேங்கி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. இதனை அதிகாரிகளும், ஊழியர்களும் கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் முறையிட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Related Tags :
Next Story