மும்பை அந்தேரியில் 328 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் 4 பேர் கைது
அந்தேரியில் 328 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை அந்தேரி மேற்குவிராதேசாய் ரோடு மற்றும் ஜீவன் நகர் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் பால் பாக்கெட்டுகளில் தண்ணீர் கலப்படம் செய்யப்படுவதாக அம்போலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார்நேற்று அதிகாலை 5 மணி அளவில், அங்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது 2 குடிசை வீடுகளில் இருந்து இரண்டு பேர் பால் பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு வந்தனர்.
இதை கவனித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது கையில் இருப்பது கலப்பட பால் பாக்கெட்டுகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்த 2 குடிசை வீடுகளிலும் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, பால் பாக்கெட்டுகளை பிரித்து அதில் தண்ணீர் கலந்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த 328 லிட்டர் கலப்பட பால் பாக்கெட்டுகள், உபகரணங்கள், 128 காலி பால் பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கைதானவர்கள் பெயர் செய்து நரசிய்யா (வயது47), ரவி பப்பையா (40), வெங்கையா (40), சாகில்குமார் (24) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story