தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2018 5:57 AM IST (Updated: 31 Oct 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகைக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுக்கூப்பன் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் பரிசுக்கூப்பன் வழங்குவதற்கான அறிவிப்புகூட வரவில்லை.

இதைத்தொடர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு.) புதுவை வர்த்தக சபை கட்டிடத்தில் செயல்படும் அமைப்புசாரா தொழிலாளர் நல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள் தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஊரில் இல்லை என்றும், அவர் வந்ததும் பரிசுக்கூப்பன் தொடர்பாக பேசி அறிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story