ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் அறிமுகம்


ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் அறிமுகம்
x
தினத்தந்தி 31 Oct 2018 12:51 PM IST (Updated: 31 Oct 2018 12:51 PM IST)
t-max-icont-min-icon

ஹீரோ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மாஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டூயட் 125 என்ற இரண்டு மாடல்களை காட்சிப்படுத்தியிருந்தது. இதில் டூயட் 125 மாடலின் பெயர் டெஸ்டினி 125 என மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்துக்கு ஏற்ற ஸ்கூட்டராக இது உள்ளது. ஸ்கூட்டர் நிறத்தில் அதன் ரியர் வியூ மிரர் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ண சீட், பெட்ரோல் நிரப்பும் பகுதியில் கூடுதலாக ஒரு மூடி, சைடு ஸ்டாண்டு போட்டு வண்டியை ஓட்டினால் அதை எச்சரிக்கும் வசதி, சர்வீஸ் இன்டிகேட்டர், பாஸ் ஸ்விட்ச் ஆகியன உள்ளது. சீட்டின் அடிப் பகுதியில் மொபைல் சார்ஜர் மற்றும் விளக்கு வசதி கொண்டது.

இந்த ஸ்கூட்டர் 125 சி.சி. திறனுடன் 8.7 ஹெச்.பி. மற்றும் 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் அளவைக் கொண்டது. இதில் ஐ-3 எஸ் அதாவது சிக்னலில் நின்று பிறகு ஸ்டார்ட் ஆகும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

பொதுவாக ஹீரோ மோட்டார் சைக்கிளில் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் அளித்து வந்தது. தற்போது முதல் முறையாக டெஸ்டினி, ஸ்கூட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலாய் சக்கரம் மற்றும் லிங்க்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்ஸஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக இது களமிறக்கப்படுகிறது. விலையும் இவ்விரு ஸ்கூட்டரை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story