‘டெங்கு’ கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகள், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகள், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘டெங்கு’ கொசு புழுக்கள் உற்பத்தியாக இடமளிக்கும் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை மீறி டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்ட வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு மாநகராட்சியால் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 630 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,“அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கடைகள், உணவு விடுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை காற்று புகாத வண்ணம் மூடி வைத்திருக்கவேண்டும். ஏற்கனவே, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு கட்டிடங்கள், புதிய கட்டுமான பகுதிகளில் தினசரி மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு கொசு புழுக்கள் உற்பத்தியாக உள்ள காரணிகள் கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிப்பதுடன் அந்த கட்டிடத்தின் குடிநீர் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்படும்” எனவும் எச்சரித்தார்.
Related Tags :
Next Story