திருப்போரூர் அருகே வாடகை ஆட்டோவில் வந்து கொள்ளை; 2 பேர் கைது கொள்ளையனை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


திருப்போரூர் அருகே வாடகை ஆட்டோவில் வந்து கொள்ளை; 2 பேர் கைது கொள்ளையனை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 1 Nov 2018 3:30 AM IST (Updated: 1 Nov 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே வாடகை ஆட்டோவில் வந்து கொள்ளையடித்த 2 பேரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்போரூர்,

திருப்போரூர் அருகே காலவாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் கழினிப்பாக்கத்தை சேர்ந்த மன்னார் (வயது 36) வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சமீபத்தில் ரூ.5 லட்சத்திற்கு மேல் கொள்ளை நடந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று அக்கடை அருகே சந்தேகப்படும்படியாக ஒரு ஆட்டோ நின்றது. அதில் சிலர் இருந்தனர். இதை அறிந்த பொது மக்கள் அங்கு சென்று அவர்களை பிடிக்க முற்பட்டனர். இதில் ஆட்டோவில் 5 பேர் தப்பினர். ஒருவர் மட்டும் பொது மக்களிடம் சிக்கினார். அவரை பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் தண்டலத்தை சேர்ந்த பிரபா (30) என்பதும், வாடகை ஆட்டோ மூலம் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்தது. பிரபா கொடுத்த தகவலின் பேரில் குமார் (32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story