மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.28¾ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்


மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.28¾ லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:45 AM IST (Updated: 1 Nov 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.28¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

திருவையாறு,

திருவையாறு அருகே கல்யாணபுரம் 2-ம் சேத்தி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, நிலவள வங்கி தலைவர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவையாறு தாசில்தார் ராமச்சந்திரன் வரவேற்றார்.

முகாமில் வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 385 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 202 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபாலன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் ஜஸ்டின், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவையாறு ஒன்றிய ஆணையர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Next Story