செல்பி எடுக்க உதவும் வாடகை விமானம்
ரஷியாவில் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களை வெளியிடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுக்காகவே ஜியான்லுகா வசியும், டான் பில்ஸெரியனும் சேர்ந்து ஜெட் விமானத்தை வாடகைக்குக் கொடுக்கின்றனர்.
ஆடம்பரமான இந்த விமானத்தில் சில மணி நேரங்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டு, விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடலாம்.
“எல்லோராலும் தனி விமானத்தில் பயணம் செய்ய இயலாது. ஆனால் ஆசை இருக்கும். அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் விமானத்தை வாடகைக்கு விடுகிறோம். 2 மணி நேரத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்பது சாதாரணமானதுதான். நாங்களே தொழில்முறை ஒளிப்படக்காரரையும் ஒப்பனை செய்பவரையும் ஏற்பாடு செய்கிறோம். அவற்றுக்கு தனிக் கட்டணம். விலை உயர்ந்த ஷாம்பெயின் பாட்டிலும் சுவையான உணவும் மேஜையில் இருக்கும். இவற்றைச் சாப்பிடுவதுபோல் படம் எடுத்துக்கொள்ளலாம். இங்கே வருபவர்கள் எங்களின் சேவையில் மனம் மகிழ்ந்து, பணத்தை தாராளமாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மீது ஆர்வம் இருப்பவர்களுக்குத்தான் எங்கள் சேவையின் மகத்துவம் புரியும்” என்கிறார்கள் இந்த ரஷியர்கள்.
Related Tags :
Next Story