காஞ்சீபுரம் அருகே, மணல் கடத்தல்; 6 பேர் கைது
மணல் கடத்தல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே வயலக்காவூர் செய்யாறு பாலாற்று பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதையொட்டி முனுசாமி (வயது 65), ரமேஷ் என்கிற காசி (33), கணபதி (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த பெருநகர் பகுதியில் டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுவதாக பெருநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையொட்டி, மாங்கல் ஜங்சன் ரோட்டை சேர்ந்த சிலம்பரசன் (27), வாழவந்தாலை சேர்ந்த மணிவண்ணன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வெங்கப்புரம் செய்யாறு பாலாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நெமிலி கிராமத்தை சேர்ந்த செல்வம் (32 ) என்பவரை பெருநகர் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story