நகராட்சி, மாநகராட்சிகளில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ம.தி.மு.க. வலியுறுத்தல்


நகராட்சி, மாநகராட்சிகளில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ம.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Nov 2018 4:15 AM IST (Updated: 1 Nov 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி, மாநகராட்சிகளில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் ம.தி.மு.க. என வலியுறுத்தி உள்ளது.

சுந்தரக்கோட்டை,
மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிரவன் (கோட்டூர்), தமிழ்வாணன் (திருவாரூர்), காசி.சிவவடிவேல் (குடவாசல்), நடராஜன் (முத்துப்பேட்டை), கோவி.சேகர் (திருத்துறைப்பூண்டி), ராஜமாணிக்கம் (நீடாமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மன்னார்குடி ஒன்றிய செயலாளர் மாசிலாமணி வரவேற்றார். இதில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா.அழகு சுந்தரம், துணைச்செயலாளர் ஆரூர்.சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும். முல்லைபெரியாறு அணை அருகே பீர்மேடு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கேரளத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில விவசாய அணி நிர்வாகி நடராஜன், மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சண்.சரவணன் நன்றி கூறினார்.

Next Story