கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுதலை நாள் விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்
புதுச்சேரி மாநில கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் நேற்று விடுதலை நாள் விழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
திருக்கனூர்,
புதுச்சேரி மாநில அரசின் சார்பில் விடுதலை நாள் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நேற்று விடுதலை நாள் விழா கொண்டாட்டங்கள் நடந்தன.
திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதுச்சேரி விடுதலை நாள் விழா நடந்தது. விழாவிற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீதாராமன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் விழாவின்போது ஆணையர் சீதாராமன் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
விழாவில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் பாஸ்கரன், அலுவலக மேலாளர் (பொறுப்பு) அன்பழகன் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விடுதலை நாள் நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் யுவராஜ் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆணையர் சவுந்திரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உதவிப்பொறியாளர் தமிழரசன் மற்றும் அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புதுச்சேரி விடுதலை நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் அவர் வழங்கினார்.

Related Tags :
Next Story