மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது
தர்மபுரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை முறைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மூலம் விழிப்புணர்வு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த குழுவினர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் பேரிடர்களை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை குறித்த அதிகாரிகள் ஆய்வுகூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லா கான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் துணை கமாண்டர் வைரநாதன் கலந்து கொண்டு புயல்,மழை, வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசுகையில், பேரிடர் காலங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அளித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி துறை சார்ந்த அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அனைத்துதுறைகளை சேர்ந்த அதிகாரிகள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story