பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஊருக்குள் வரும் வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
சேலம்,
கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுதவிர ஊருக்குள் வரும் வியாபாரிகளிடம் அந்த நபர்கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை தாக்குகின்றனர். அந்த நபர்கள் ஒரு கட்சியை சார்ந்திருப்பதால் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் கூறினார்.

எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் மது குடித்துவிட்டு பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். எங்கள் கிராமத்திற்குள் வந்து சென்ற தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டரை அவர்கள் தரக்குறைவாக பேசியதால் கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுதவிர ஊருக்குள் வரும் வியாபாரிகளிடம் அந்த நபர்கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை தாக்குகின்றனர். அந்த நபர்கள் ஒரு கட்சியை சார்ந்திருப்பதால் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர். இந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story