சட்ட விழிப்புணர்வு முகாமில் துணிப்பை வழங்கிய புதுமண தம்பதி


சட்ட விழிப்புணர்வு முகாமில் துணிப்பை வழங்கிய புதுமண தம்பதி
x
தினத்தந்தி 2 Nov 2018 11:00 PM GMT (Updated: 2 Nov 2018 5:08 PM GMT)

சட்ட விழிப்புணர்வு முகாமில், புதுமண தம்பதி அனைவருக்கும் துணிப்பை வழங்கினர்.

கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் திருமானூரில் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சுமதி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி சரவணன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் இலவச சட்ட உதவி பெறுவதற்கான நடைமுறைகள், தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், குற்றத்திற்கான தண்டனைகள் மற்றும் குழந்தை திருமணம் கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை நீதிபதிகளும், வக்கீல்களும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

முகாமில் புதுமண தம்பதி உதயகுமார்-எழில்மதி கலந்து கொண்டு நீதிபதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர்.

முகாமில், அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி, திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வக்கீல் முத்துக்குமரன் வரவேற்றார். முடிவில் வக்கீல் மாரிமுத்து நன்றி கூறினார்.

Next Story