பள்ளியில் விஷம் தின்ற மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு


பள்ளியில் விஷம் தின்ற மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 2 Nov 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே பள்ளியில் விஷம் தின்ற மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் சூர்யா (வயது15). இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய்,- தந்தை இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மனவேதனை அடைந்த சூர்யா சம்பவத்தன்று வீட்டில் இருந்து எடுத்து வந்த எலி மருந்தை(விஷம்) பள்ளியில் வைத்து தின்றுள்ளார்.

இதனால் பள்ளியில் மயங்கி விழுந்த சூர்யாவை பள்ளி ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story