நெல்லை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலியானார்கள். இதையொட்டி சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பொது மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் ஒருசிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22 பேர் இந்த அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் 5 பேரும், டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 55). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து 3 நாட்களுக்கு முன்பு முத்துகிருஷ்ணனை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் முத்துகிருஷ்ணன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
பாளையங்கோட்டை சமாதானபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வத்துக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் நேற்று முன்தினம் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செல்வத்துக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கடையநல்லூரில் தொழிலாளி ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். கடையநல்லூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (45). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் செல்லத்துரைக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. கடையநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பன்றிக்காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இதுபற்றி அறிந்த சுகாதார துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் கடையநல்லூர் பகுதியில் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்லத்துரை வீடு உள்ள பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்களிடையே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.
ஏற்கனவே, மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுபடி தீவிர சுகாதார பணிகள் மற்றும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மேலும் இந்த பணியை தீவிரப்படுத்த கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story