கர்நாடகத்தில் சிவமொக்கா, மண்டியா உள்பட 5 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்பு
கர்நாடகத்தில் சிவமொக்கா, மண்டியா உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி இன்று(சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகள், 2 சட்ட சபை தொகுதிகள் என 5 தொகுதிகள் காலியாக உள்ளன.
அதாவது சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளும் உறுப் பினர் இல்லாமல் உள்ளனர் இந்த 5 தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி (அதாவதுஇன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
பா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 31 வேட்பாளர்கள் உள்ளனர். குறிப்பாக சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா, பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா ஆகியோரும், பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தாவும், காங்கிரஸ் சார்பில் உக்ரப்பாவும், மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடாவும், பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையாவும் போட்டியிட்டுள்ளனர்.
அதே போல் ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், பா.ஜனதா சார்பில் காங்கிரசை சேர்ந்த லிங்கப்பா எம்.எல்.சி.யின் மகன் சந்திரசேகரும், ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடாவும், பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னியும் களத்தில் உள்ளனர். இதில் ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சந்திரசேகர் நேற்று முன்தினம் திடீரென காங்கிரசுக்கு தாவிவிட்டார்.
இதனால் ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு போட்டியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும் திட்டமிட்டப்படி அங்கும் தேர்தல் நடக்கிறது. ஏனென்றால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா வேட்பாளர் என்ற இடத்தில் சந்திரசேகரின் பெயர் தான் இடம் பெறும் என்பதும், வேறு கட்சிக்கு தாவினாலும், தேர்தல் விதிமுறைகளின்படி சந்திரசேகர் பா.ஜனதா வேட்பாளர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். அதே போல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி சதானந்தகவுடா, ஷோபா எம்.பி., ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. உள்பட முன்னணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது.
இதையடுத்து வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மண்டியா உள்பட 5 தொகுதிகளில் இன்று(சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 57 வாக்குச்சாவடிகள் ‘பிங்க்‘ எனப்படும் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடிகள் ஆகும். அவற்றில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற உள்ளனர்.
மொத்த வாக்குச்சாவடிகளில் 1,502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமராக்கள்‘ மூலம் கண்காணிக்கப்படுகிறது. 1,312 நுண்ணிய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 273 கண்காணிப்பு குழுக்கள், 168 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 27 லட்சத்து 21 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 949 பேரும், பிற வாக்காளர்கள் 462 பேரும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் 1,779 பேரும் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தல் பணிகளில் 35 ஆயிரத்து 495 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். ஓட்டுப்போடுவதற்கான வாக்காளர் சீட்டுகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 2 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 6-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மதுபானம் விற்க அனுமதி இல்லை.
இந்த இடைத்தேர்தலில் 18 ஆயிரத்து 260 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 8,922 வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு நேற்று மாலையே சென்றுவிட்டனர். இன்று காலை திட்டமிட்டப்படி சரியாக 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
இதையொட்டி 5 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story