வாசுதேவநல்லூர் அருகே லாரி– மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி


வாசுதேவநல்லூர் அருகே லாரி– மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
x
தினத்தந்தி 4 Nov 2018 3:00 AM IST (Updated: 3 Nov 2018 7:24 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

விபத்தில் மாணவர் பலி 

நெல்லை மாவட்டம் புளியங்குடி ஜின்னாநகர் 2–ம் தெருவை சேர்ந்தவர் முபாரக் மகன் முகமது முஸ்தபா (வயது 19). இவர் வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். வாசுதேவநல்லூர் அருகே உள்ள கலைஞர் காலனி அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக முகமது முஸ்தபா மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது 

இதுகுறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த சேலத்தை சேர்ந்த செந்தில் (38) என்பவரை கைது செய்தனர். 


Next Story