வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது
வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த 17 வயதே ஆன சிறுமிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதுபற்றி தகவல் அறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்பேட்டை துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 22). இவரும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அருகே உறுவையாறு காலனியைச் சேர்ந்த 17 வயதே ஆன சிறுமியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக உறவினர்கள் அந்த சிறுமியை பிரசவத்துக்காக புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே அந்த சிறுமிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. அதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த சிறுமியை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சிறுமிக்கு 17 வயதே ஆகியிருந்ததால் அதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் மங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தது.
தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் 17 வயதே ஆன சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story