புதுவையில் அதிகரித்து வரும டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


புதுவையில் அதிகரித்து வரும டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக் காய்ச்சலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் மணவெளி தொகுதி பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நோணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திபாலன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சுகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், மாநில பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவனை எதிரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும்; பூரணாங்குப்பம்-தவளக்குப்பம் சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்; மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

புதுவையில் அதிகரித்து வரும் மலேரியா, டெங்கு, மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story