தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க இயலாது ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க இயலாது ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2018 10:15 PM GMT (Updated: 3 Nov 2018 10:12 PM GMT)

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் புறநகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூபதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இது நடைமுறைக்கு ஒத்துவராத தீர்ப்பு. கிராமப்புறங்களில் பட்டாசு வெடிப்பதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பால் கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் பட்டாசுகளை அநியாய விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பதாக செய்திகள் வந்துள்ளது.

இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story