பேசினால் மூளை வளரும்


பேசினால் மூளை வளரும்
x
தினத்தந்தி 4 Nov 2018 12:38 PM IST (Updated: 4 Nov 2018 12:38 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெற்றோர் ஒருசில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவைகளுக்கு மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். அது குழந்தைகளின் தசைகள் மற்றும் மனதை இலகுவாக்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடல் பக்குவப்படுவதற்கும் வழிவகை செய்யும். குழந்தைகளிடம் அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கவும் வேண்டும். நாம் பேசுவது பச்சிளம் குழந்தைகளுக்கு புரியாது என்ற எண்ணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. உரையாடல் அவர்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைக்கு மூளை வளர்ச்சி தூண்டப்படும். பாடல்கள் கேட்பதும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தாலும் புத்தகங்களில் இருக்கும் படங்களை காண்பித்து விளக்கம் அளிக்கலாம். அந்த படங்கள் குழந்தைகளின் மனதில் பதிய தொடங்கிவிடும். குழந்தைகளை ஒரே இடத்தில் இருப்பதற்கு பழக்கப்படுத்திவிடக்கூடாது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டும். சுழலும் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் அங்கும், இங்கும் நகரும் போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும்.

தூரத்தில் இருக்கும் பொருட்களை காண்பித்து தொட்டு வரும்படி குழந்தைகளிடம் கூற வேண்டும். அது கை, கால்களை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு பயிற்சியாக அமையும். குழந்தைகள் படுத்திருக்கும்போது அவர்களின் தலைக்கு மேல் கண்கவர் பொருட்களை தொங்கவிட வேண்டும். அந்த பொருளை உற்று நோக்கவும், கையால் எடுக்கவும் பழகுவார்கள். அது கண்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். எல்லா பொருட்களையும் கூர்ந்து பார்க்கவும் பார்வையை ஓரிடத்தில் குவிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள்.

Next Story