வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விடுபட்ட பதிவை புதுப்பிக்க வாய்ப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2011-16-ம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விடுபட்ட தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.
தூத்துக்குடி,
இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விடுபட்ட பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி விடுபட்ட பதிவை வரும் ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம்.2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.
நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பிக்க விரும்புவோர் http://tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story