தூத்துக்குடியில் தீபாவளி விற்பனை களைகட்டியது


தூத்துக்குடியில் தீபாவளி விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 4 Nov 2018 5:25 PM GMT)

தூத்துக்குடி நகரில் தீபாவளி விற்பனை களை கட்டி உள்ளது. நகரிலுள்ள பஜாரில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே தூத்துக்குடி நகரிலுள்ள அனைத்து ஜவுளி கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நாளை(6-ந் தேதி) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நகரிலுள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை நாள் என்பதால் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் இருந்து பல ஆயிரம் மக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட பொருட் களை வாங்குவதற்காக தூத்துக்குடி நகரில் வந்து குவிந்தனர். இதனால் தீபாவளி விற்பனை களைகட்டி காணப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அனைத்து தெருக்கள், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதே போன்று பட்டாசு கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விதவிதமான பட்டாசுகளையும் மக்கள் வாங்கி சென்றனர்.

போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், குற்ற செயல்கள் நடப்பதை தடுக்கவும் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story