தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் கேமரா பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவு


தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் கேமரா பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2018 9:51 PM GMT (Updated: 4 Nov 2018 9:51 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர்,
இந்து பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான தீபாவளி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுக்க, பட்டாசுகள் வாங்க என பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கும்.

எனவே தீபாவளியை முன்னிட்டு திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேலூர் மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மண்டிவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் இருந்தும் போலீசார் கூட்டத்தை கண்காணிக்கின்றனர். அதேபோன்று மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்கவும், அதேபோன்று விபத்துகள் அதிகமாக நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 21 இடங்களில் வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story