வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம், ‘டார்லிங் குரூப்ஸ்’ வெங்கடசுப்பு உள்பட வேலூர் பிரபலங்கள் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஹலோ எப்.எம்.91.5-ல் இன்று ஒலிபரப்பாகிறது


வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம், ‘டார்லிங் குரூப்ஸ்’ வெங்கடசுப்பு உள்பட வேலூர் பிரபலங்கள் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஹலோ எப்.எம்.91.5-ல் இன்று ஒலிபரப்பாகிறது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 2018-11-05T03:25:51+05:30)

வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம், ‘டார்லிங் குரூப்ஸ்’ நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு உள்பட வேலூர் பிரபலங்கள் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஹலோ எப்.எம்.91.5-ல் இன்று ஒலிபரப்பாகிறது.

வேலூர், 

தீபாவளியை முன்னிட்டு கல்வி, தொழில்துறை, பாரம்பரிய சிலம்பம் மற்றும் அழகுக்கலை உள்பட வேலூரை சேர்ந்த பல்வேறு துறைகளின் பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஹலோ எப்.எம்.91.5-ல் இன்று (திங்கட்கிழமை) முழுவதும் ஒலிபரப்பாக உள்ளன.

அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரையிலான ‘ஆத்திசூடி’ நிகழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துக்களுடன், தீப ஒளி திருநாளின் பெருமை சொல்லும் ஒரு சிறப்புத் தொகுப்பு இடம்பெறுகிறது.

காலை 7மணி முதல் 8 மணி வரை தீபாவளி நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் கவர்ந்தவர்களுக்கு சொல்லிக்கொள்ள தித்திக்கும் நல்வாழ்த்துக்கள் சிறப்பு ‘சில்லுன்னு ஒரு காலை’ நிகழ்ச்சி இடம்பெறுகிறது. காலை 8 மணிமுதல் 10 மணி வரை ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவரும் ‘டார்லிங் குரூப்ஸ்’ நிர்வாக இயக்குனருமான வெங்கடசுப்பு கலந்து கொண்டு வேலூரின் தொழில் வளர்ச்சி இளைஞர் நலன் சமூக முன்னேற்றம் குறித்தும், தொழில்துறையில் தன்னுடைய முயற்சிகள் சாதனைகள் உள்பட ஏராளமான தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ‘பல்லாங்குழி’ நிகழ்ச்சியில் கலகலப்பான தீபாவளி பலகாரங்களின் பெயர் கொண்ட வித விதமான விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றது.

நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை ‘அஞ்சறைப்பெட்டி’ நிகழ்ச்சியில் பிரபல அழகு கலை நிபுணர் Stud-io11 யாமினி சதீஷ் கலந்து கொண்டு அழகுக்கலை தொடர்பான பல்வேறு வகையான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலான ‘மேட்னி மெலோடீஸ்’ நிகழ்ச்சியில் 915 99 44 915 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணிற்கும் 01466606666 என்ற ‘ஹலோ எப் எம்’ எண்ணிற்கும் நேயர்கள் தொடர்பு கொண்டு தீபாவளிக்கு திரைகண்ட தனக்கு பிடித்த படங்களை பற்றி பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான ‘நாலு மணி வாலு’ நிகழ்ச்சியில், தெற்காசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த டெக்னிக்கல் சிலம்ப அணி பங்குபெறும் ‘பாரம்பரியம் பேசும் சிலம்பம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான ‘தாறுமாறு தர்பார்’ நிகழ்ச்சியில் வி.ஐ.டி.யின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு தனது கல்விப்பணி பசுமை திட்டங்கள், பாலாறு குறித்தான தனது கனவுகளையும் பொறுப்புகளையும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசவுள்ளார்.

இரவு 8 மணி முதல் 10 மணி வரை ‘டைரி’ நிகழ்ச்சியில் உறவுகளோடு கொண்டாடி மகிழ்ந்த தீபாவளி பண்டிகையும், நமது வாழ்வின் மறக்கமுடியாத குடும்ப விழாக்களையும் பற்றி நேயர்கள் பகிர்ந்த ‘டைரி’ பதிவுகளோடு சிறப்பு டைரி ஒலிபரப்பாக உள்ளது.

ஹலோ எப்.எம்.91.5-ல் இணைந்திருங்கள், தித்திக்கும் இனிய தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்!

Next Story