கள்ளக்குறிச்சி அருகே: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு


கள்ளக்குறிச்சி அருகே: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-05T04:02:41+05:30)

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி, 

சேலம் மாவட்டம் ராமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி மீனாட்சி(வயது 56). சம்பவத்தன்று இவர் தனது மகன் செல்வக்குமாருடன் ஒருகாரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை செல்வக்குமார் ஓட்டினார். கள்ளக்குறிச்சி-சின்னசேலம் சாலையில் கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக செல்வக்குமார், காரை திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார்.

இதில் செல்வக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமார், மீனாட்சி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். செல்வக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகிறார். இதுகுறித்த புகாரின் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story