நாலச்சோப்ரா ஆயுத வழக்கில் குற்றப்பத்திரிகை போலீசாருக்கு கூடுதலாக 30 நாள் அவகாசம்


நாலச்சோப்ரா ஆயுத வழக்கில் குற்றப்பத்திரிகை போலீசாருக்கு கூடுதலாக 30 நாள் அவகாசம்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:56 AM IST (Updated: 5 Nov 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

நாலச்சோப்ரா ஆயுத வழக்கில் கைதானவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு கூடுதலாக 30 நாள் கால அவகாசம் கொடுத்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வைபவ் ராவுத், சரத் கலாஸ்கர், சுதன்வா கோந்த்லேகர், ஸ்ரீகாந்த் பங்கர்கர், அவினாஸ் பவார், வாசுதேவ் சூர்யவன்சி, விஜய் லோத்தி, கணேஷ் கபாலே ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீஸ் விசாரணையில், இவர்களுக்கு பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே இது தொடர்பாக அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் நரேந்திர தபோல்கர் கொலையில் கைதான அமோல் காலே, புனேயில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியதில் முங்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாலச்சோப்ரா ஆயுத வழக்கில் கைதான 8 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 90 நாட்கள் காலஅவகாசம் கேட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில், தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதலாக 30 நாட்கள் மட்டும் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.


Next Story