தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் விற்பனை களை கட்டியது

புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் துணி, பட்டாசு விற்பனை களைகட்டியது.
தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை அரசு ஊழியர்கள் மற்றும் சில அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் நேற்று பொருட்கள் விற்பனை களைகட்டியது. புதுவை அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, விழுப்புரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் விற்பனை களைகட்டியது.
குறிப்பாக துணிக்கடைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான புதிய ரக துணிகளை வாங்கி மகிழ்ந்தனர்.
இதேபோல் புதுவை சண்டே மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மழை இல்லாததால் சண்டே மார்க்கெட்டில் விற்பனையும் சூடுபிடித்தது. புதுவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பலரும் வந்து புதிய துணிவகைகளை வாங்கிச் செல்வதை காண முடிந்தது. சண்டே மார்க்கெட் எங்கும் மக்கள் தலையாகவே காணப்பட்டது. இதேபோல் இனிப்பு கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதுமட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகைக்காக புதுவை நகரப்பகுதியில் ஆங்காங்கே பட்டாசு கடைகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த கடைகளில் சிறியவர், பெரியவர் என பலரும் குவிந்திருந்தனர். விதவிதமான பட்டாசு ரகங்களை வாங்கி தரச்சொல்லி பெற்றோரிடம் அடம்பிடித்த சிறுவர்களையும் காணமுடிந்தது.
தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுவை நகரப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. புதுவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் நகரப்பகுதிக்கு வந்ததால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட வீதிகளில் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரப்பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காலை 10 மணி முதல் இரவு 10 வரையும் காணப்பட்டது. புதுச்சேரி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்தும், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொருட்களை வாங்கி சென்றனர். நகரப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்தாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story