மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி மார்த்தாண்டம் அருகே பரிதாபம்


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி மார்த்தாண்டம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 8:03 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை, கோமாரிபட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது44). இவருக்கு சுமதி (33) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சாமிநாதன் கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாறவிளை பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து நிதிநிறுவனம் நடத்தி வந்தார்.

இவர் சம்பவத்தன்று கல்லுத்தொட்டியில் இருந்து மாமூட்டுக்கடை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முண்டவிளை பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதில் சாமிநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாண்விக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story