போனஸ் வழங்காததை கண்டித்து உப்பள தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்
சாயல்குடி அருகே போனஸ் வழங்காததை கண்டித்து உப்பள தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காத மேலாண்மை இயக்குனரை கண்டித்து தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் வேலையை புறக்கணித்து விட்டு அரை நிர்வாணம் மற்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க தலைவர் பச்சமால், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிற்சங்க செயலாளர் குமரவடிவேல், துணை தலைவர்கள் தனிராமு, ராஜேந்திரன், பொருளாளர் முருகன், துணை செயலாளர் காட்டுராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
போனஸ் வழங்காத பட்சத்தில் தீபாவளியன்று தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவதுடன் தொடர்ந்து கதவடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story