பெரம்பலூர் ஒதியம் கைகாட்டியில் நாளை மறுநாள் நடக்கும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்


பெரம்பலூர் ஒதியம் கைகாட்டியில் நாளை மறுநாள் நடக்கும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
x
தினத்தந்தி 5 Nov 2018 11:00 PM GMT (Updated: 5 Nov 2018 7:23 PM GMT)

பெரம்பலூர் ஒதியம் கைகாட்டியில் நாளை மறுநாள் நடக்கும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.

திருச்சி,

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 3 மணி அளவில் பெரம்பலூர்-அரியலூர் சாலை ஒதியம் கைகாட்டியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.

அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வரவேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் முன்னணி பிரமுகர்களும் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலம் பெரம்பலூருக்கு வருகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் 8-ந்தேதி இரவு திருச்சியில் தங்கும் மு.க.ஸ்டாலின் மறுநாள் (9-ந்தேதி) காலை 9 மணிக்கு திருச்சி மாவட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் திருமணத்தை நடத்தி வைக்கிறார். திருமணத்தை நடத்தி முடித்து விட்டு, மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

பெரம்பலூர் பொதுக்கூட்டம் மற்றும் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளும்படி கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story