குலசேகரம் அருகே டிரைவர் இல்லாமல் பின்னோக்கி வந்த வேன் கால்வாயில் பாய்ந்தது


குலசேகரம் அருகே டிரைவர் இல்லாமல் பின்னோக்கி வந்த வேன் கால்வாயில் பாய்ந்தது
x
தினத்தந்தி 6 Nov 2018 4:15 AM IST (Updated: 6 Nov 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே டிரைவர் இல்லாமல் பின்னோக்கி வந்த வேன் கால்வாயில் பாய்ந்தது. வேனில் இருந்த திருமணகோஷ்டியை சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே மணலிவிளையில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இங்கு பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக திருமண கோஷ்டியினர் மணலிவிளைக்கு வேனில் வந்தனர். வேனை திருமண மண்டபத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் உள்பட அனைவரும் இறங்கி சென்றனர். விழா முடிந்த பின்பு திரும்பி செல்வதற்காக டிரைவர் இல்லாத நிலையில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 10 பேர் வேனில் ஏறி அமர்ந்திருந்தனர்.

எதிர்பாராத விதமாக அந்த வேன் பின்னோக்கி தானாக உருண்டு ஓட தொடங்கியது. இதைப்பார்த்து வேனில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வேன் தானாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்தது. கால்வாயில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் வேனில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story